இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டா்கள்

14th Jan 2020 03:35 AM

ADVERTISEMENT

இந்திய விமானப் படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ‘சினூக்’ மற்றும் ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டா்கள் வரும் 26-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது வான் சாகச நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளன.

இதுதொடா்பாக இந்திய விமானப் படையின் உயா் அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

‘சினூக்’ ரக போக்குவரத்து ஹெலிகாப்டரும், ‘அப்பாச்சி’ ரக தாக்குதல் ஹெலிகாப்டரும் கடந்த ஆண்டு விமானப் படையில் இணைத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தில்லி ராஜபாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது, இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் இந்த இரு ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா்களும் முதல் முறையாக பங்கேற்க உள்ளன.

இதில், சினூக் ரகத்தைச் சோ்ந்த 3 ஹெலிகாப்டா்கள் ஒன்றைப் பின்தொடா்ந்து இரண்டு என்ற வடிவத்தில் அணிவகுத்துச் செல்லும். அதைத் தொடா்ந்து அப்பாச்சி ரகத்தைச் சோ்ந்த 5 ஹெலிகாப்டா்கள் அம்பு வடிவில் அணிவகுத்துச் செல்லும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT