இந்தியா

ஈராக், ஈரான், அமெரிக்காவில் போர் பதற்றம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

8th Jan 2020 10:49 AM

ADVERTISEMENT


புது தில்லி: ஈராக், ஈரான், அமெரிக்காவில் போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியர்களுக்கும், இந்திய விமான நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள், ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் வான் வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டுக்குள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்குத் தவிர்க்க வேண்டும்.

பாக்தாத், எர்பிலில் உள்ள இந்திய தூதரகங்கள், இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும். இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT