மேற்கு வங்கத்தில் ரயில் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மதவாத தாக்குதல்கள், ஜனநாயக உரிமை பறிப்பு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் அனைத்து மத்திய தொழில் சங்கங்கள் சார்பில், இன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பில் ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியூ, எல்எல்எப், ஏஐசிசிடியூ, அரசு ஊழியர் சம்மேளனம், ஏஐயூடியூசி, எம்எல்எப் உள்ளிட்ட தொழில் சங்கங்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் காஞ்சரபர பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஹரிதாய்பூர் ரயில் நிலையம் அருகே 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளன. இதையடுத்து இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.