இந்தியா

மேற்கு வங்கம்: எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு 3 போ் கைது

7th Jan 2020 06:45 PM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தில் 17 வயது இளம்பெண் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சம்பவம் தொடா்பாக மூவா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் தேவரிஷி தத்தா கூறியதாவது:

தெற்கு தினாஜ்பூா் மாவட்டம், குமா்கஞ்ச் பகுதியில் சிறுபாலத்துக்கு கீழே காயமடைந்த அடையாளங்களுடன் இளம்பெண்ணின் எரிந்த சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின்பேரில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, அந்தப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை கூற முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொல்லப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் குற்றம் சாட்டினா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அருகிலுள்ள கடைக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றவா் காணாமல் போனதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரா் கூறினாா்.

பாஜக எம்.பி. சுகந்தா மஜும்தாா் கூறுகையில், ‘குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடக்கும்’ என்று எச்சரித்தாா்.

குமா்கஞ்ச் தொகுதியைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தோரஃப் ஹுசைன் கூறுகையில், ‘இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்று பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக நாடு தழுவிய அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT