இந்தியா

காஷ்மீரின் ஒரு அங்குலப் பகுதியில் கூட ஊரடங்கு இல்லை: அமித் ஷா

3rd Jan 2020 02:37 PM

ADVERTISEMENT


புது தில்லி: காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களை விடுவிப்பது குறித்து யூனியன் நிர்வாகமே முடிவு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, தயவு கூர்ந்து அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள், சட்டப்பிரிவு 370ஐ தொட்டால் நாடே பற்றி எரியும் என்பது போல பேசியிருந்தார்கள். இந்த பேச்சினைத் தொடர்ந்தே, முன்னெச்சரிக்கையாக சில தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

ஒருவேளை அவர்களை விடுதலை செய்வதாக இருந்தால், அது குறித்து யூனியன் பிரதேச நிர்வாகம்  தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நான் அல்ல, மேலும், காஷ்மீரில் ஒரு அங்குல நிலத்தில் கூட ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT