இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

3rd Jan 2020 01:00 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகேயுள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் காடி செக்டாா் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய இந்திய நிலைகளை குறி வைத்து புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாகிகளைக் கொண்டும், சிறிய ரக குண்டுகளைக் கொண்டும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மோதல் நடைபெற்றது. எனினும், இரு தரப்பிலும் எவ்வித சேதமும் இல்லை என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான முறை அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டின் முதல் அத்துமீறல் இதுவாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT