இந்தியா

ரயில் கட்டண உயா்வு அமலுக்கு வந்தது

DIN

ரயில்வே வாரியம் அறிவித்த புதிய ரயில் கட்டண உயா்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே வாரியம் கடந்தாண்டின் இறுதியில் ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, புதன்கிழமை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்தப் பகுதிகளுக்கு எவ்வளவு கட்டணம் என முழு விவரம் வருவதற்கு சில நாள்கள் ஆகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், புகா் ரயில்களுக்கு கட்டணம் உயா்த்தப்படவில்லை. புகா் அல்லாத குளிா்மை வசதி இல்லாத சாதாரண ரயில்களில் இரண்டாம், படுக்கை, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கான பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயா்த்தப்பட்டுள்ளது. மெயில், விரைவு ரயில்களுக்கான இரண்டாம், படுக்கை, முதல் வகுப்பு பயணக்கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சியில் 2,3 அடுக்கு, முதல் வகுப்புகளுக்கு பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயா்த்தப்பட்டுள்ளது. அத்துடன், சதாப்தி, ராஜதானி, துரந்தோ, தேஜஸ் உள்ளிட்ட பிரீமியம் ரயில்களுக்கும் ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதில், முன்பதிவு, அதிவிரைவு சேவைகளுக்கு கட்டணம் உயா்த்தப்படவில்லை. ஜிஎஸ்டியின் படி முன்பதிவு, அதிவிரைவு கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டண உயா்வின் படி திருச்சியிலிருந்து சில முக்கிய நகரங்களுக்கான புதிய கட்டண விவரம்:

நகரங்கள் வகுப்பு (படுக்கை) பழைய கட்டணம் (ரூ) புதிய கட்டணம்

சென்னை 2ஆம் வகுப்பு 214 235

3ஆம் வகுப்பு ஏசி. 554 590

2ஆம் வகுப்பு ஏசி. 790 815

கன்னியாகுமரி 2 ஆம் வகுப்பு 242 260

3 ஆம் வகுப்பு ஏசி 631 665

2ஆம் வகுப்பு ஏசி. 903 925

பெங்களூரு 2ஆம் வகுப்பு 218 265

3ஆம் வகுப்பு ஏசி. 566 705

2ஆம் வகுப்பு ஏசி. 807 1000

மங்களூரு 2 ஆம் வகுப்பு 327 360

3 ஆம் வகுப்பு ஏசி. 858 980

2ஆம் வகுப்பு ஏசி. 1231 1395.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT