இந்தியா

வரி வசூல் பணிகளுக்கு இனி ஹெலிகாப்டர்களில் செல்லலாம்: உத்தரப்பிரதேச உயர் அலுவலர்களுக்கு ஜாக்பாட்!

2nd Jan 2020 04:18 PM

ADVERTISEMENT

 

லக்னௌ: வரி வசூல் பணிகளுக்கு இனி ஹெலிகாப்டர்களில் செல்லலாம் என்று அம்மாநில உயர் அலுவலர்களுக்கு  முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக சமீபத்தில் வரி வசூல் பிரிவு உயர் அலுவலர்களுடன் நடந்த கூட்டம் ஒன்றில் முதல்வர் யோகி பேசும்போது, 'மாநிலத்தில் வரிவசூல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தொடர்ச்சியாக அனைத்து வருவாய் நிர்வாகப் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும் என்றும், குறிப்பாக கலால், முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர்கள் மாநிலத்தின் எட்டு வரி நிர்வாகப் பிரிவுகளையும் கவனமாகப்  பார்வையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயர் அலுவலர்கள் வரி வசூல் பணிகளுக்கு மாநிலத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அனுமதியளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT