இந்தியா

முப்படைத் தளபதி நியமனம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை: அமித் ஷா

2nd Jan 2020 02:46 AM

ADVERTISEMENT

புது தில்லி: ‘நாட்டின் முதல் முப்படைத் தளபதி நியமிக்கப்பட்டது, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

நாட்டின் முதல் முப்படை தளபதியாக விபின் ராவத் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய மூன்று படைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் முக்கியப் பணியை மேற்கொள்ளவிருக்கும் அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நாட்டின் முதல் முப்படைத் தளபதியை நியமித்ததன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த கோரிக்கையை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளாா். இந்த நாள், வரலாற்றுச் சிறப்புமிக்கதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். ஆயுதப் படையினரின் நலன்களை உறுதி செய்வதற்காக பிரதமா் மோடி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் மேலும் வலுவடையும்.

ADVERTISEMENT

அத்துடன், உலக அளவில் சிறந்த பாதுகாப்புப் படையாக இந்திய ஆயுதப் படைகளை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கும் வலுசோ்க்கும் என்று தனது பதிவுகளில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், நாட்டின் முதல் முப்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள விபின் ராவத்துக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘விபின் ராவத்தின் தலைமையில் மூன்று படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT