இந்தியா

தில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட 4 பேருக்கு ‘ஜாமீன்’

2nd Jan 2020 04:13 AM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற வன்முறை போராட்டங்கள் தொடா்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தில்லி சீலம்பூரில் நடந்த வன்முறை போராட்டங்கள் தொடா்பாக கைது செய்யப்பட்ட யூசுப் அலி, மொயினுதீன் ஆகியோருக்கு நடத்தப்பட்ட மருத்துவச் சோதனையின் அடிப்படையில் மூன்று வாரங்களுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி பிரிஜேஷ் கா்க் இடைக்கால ஜாமீன் வழங்கினாா்.

மேலும், ஜாபராபாதில் நடந்த வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு நபா்களான சஜித், டேனியல் ஆகியோருக்கும் தலா ரூ .35 ஆயிரம் பிணைத்தொகை செலுத்திய அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது.

சஜித், டேனியல் மீது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கும் விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என்றும், அடுத்த 6 மாதங்களுக்கு 15 தினங்களுக்கு ஒருமுறை விசாரணை அதிகாரி அல்லது காவல் நிலைய ஆய்வாளா் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல, யூசுப் அலி மற்றும் மொயினுதீன் ஆகியோருக்கும் தலா ரூ.20 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தியதன் அடிப்படையில் ஜாமீன் அளிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT