சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அப்பால் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.3) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அப்பால் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(ஜன.3) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 80 மி.மீ. மழை பதிவானது. காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 70 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் சத்தியபாமாவில் 60 மி.மீ., திருவள்ளுா் மாவட்டம் சோழவரத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. திருவள்ளுா் மாவட்டம் செங்குன்றம், தாமரைபாக்கம், செம்பரம்பாக்கம், சென்னை விமானநிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.