இந்தியா

ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே பின்பற்றுவோம்; விபின் ராவத்

1st Jan 2020 04:10 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே பின்பற்றுவோம் என்று முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியான விபின் ராவத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி முன்னரே அறிவித்திருந்தபடி முப்படைகளின் தலைமைத் தளபதி என்று ஒரு புதிய பதவி உருவாக்கப்பட்டது. அப்பதவியில் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத்தை நியமனம் செய்து அறிவிப்பு வெளியானது. அதையடுத்து அவர் புதனன்று பொறுப்பேற்றார். பின்னர் தில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்த்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ்குமார் சிங் பதூரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் அவருடன் உடனிருந்தனர்.

இந்நிலையில் ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே பின்பற்றுவோம் என்று முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியான விபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முப்படைகளையும் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட வைப்பதே எனது இலக்கு என்றும், பாதுகாப்பு படையினர் அரசியலில் இருந்து விலகியே இருப்போம்; ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே பின்பற்றுவோம்' என்றும் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT