இந்தியா

பாக். அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

1st Jan 2020 10:26 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி அளித்து வருகிறது. 

நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்று வரும் இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT