இந்தியா

மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

1st Jan 2020 10:09 PM

ADVERTISEMENT


பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஜனவரி 16-இல் இருந்து 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் 16- ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரீக்ஷா பே சர்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தார்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட இருந்தது.

இந்நிலையில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 16-ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT