இந்தியா

ஆவடியில் சாலை விபத்து: இஸ்ரோ பொறியாளர் பலி

1st Jan 2020 05:40 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இஸ்ரோ பொறியாளர் புகழேந்தி பலியானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கவிதாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (45). இவர் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு வாகனம் மீது மோதியதில், பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

அவர் தலைக்கவசம் அணிந்திருந்த போதும், வேகமாக வாகனத்தை இயக்கியதால், சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT