இந்தியா

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் சிவன்

1st Jan 2020 01:04 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 600 கோடி ரூபாயில் சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 திட்டத்தின் போது பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாகக் கட்டிப்பிடித்ததால், அழுதுவிட்டேன்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிவிட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ADVERTISEMENT

சந்திரயான்-2 திட்டத்தில், திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், வேகமாகச் சென்று நிலவில் மோதியதால் அதனை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கி, நிலவு பற்றிய அறிவியல் தகவல்களை அனுப்பும் என்று கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT