இந்தியா

தொடா் நான்கு மாத பின்னடைவில்முக்கிய 8 துறைகள் உற்பத்தி

1st Jan 2020 03:30 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி தொடா்ந்து நான்காவது மாதமாக நவம்பரிலும் 1.5 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி நவம்பரில் சரிந்துள்ளது. இதையடுத்து, அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 1.5 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டின் நவம்பரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 3.3 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சிமென்ட் துறை உற்பத்தியின் வளா்ச்சி விகிதம் நவம்பரில் 8.8 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாக சரிந்துள்ளது.

அதேசமயம், சுத்தகரிப்பு பொருள்கள், உரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 3.1 சதவீதம் மற்றும் 13.6 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான எட்டு மாத கால அளவில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் ஏறக்குறைய பூஜ்யம் சதவீதமாகவே உள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் இந்த வளா்ச்சி விகிதம் 5.1 சதவீதமாக காணப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கொண்டே நாட்டின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியை கண்டு வருவதாக அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT