இந்தியா

நிதிப் பற்றாக்குறை 128.5 சதவீதத்தை எட்டியது

29th Feb 2020 01:29 AM

ADVERTISEMENT

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 128.5 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சிஜிஏ மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் இந்தியாவின் நிதிப் பற்றாக் குறையானது ஜனவரி இறுதி நிலவரப்படி 128.5 சதவீதத்தை எட்டியுள்ளது. 2018-19 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 12.5 சதவீதமாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில், வரவுக்கும் மற்றும் செலவுக்கும் இடையிலான இடைவெளியான நிதிப் பற்றாக்குறை ரூ.9,85,472 கோடியாக உள்ளது.

ADVERTISEMENT

நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை ரூ.7,66,846 கோடியாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், தற்போது நிதிப் பற்றாக்குறை அந்த இலக்கை தாண்டியுள்ளது என சிஜிஏ தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT