இந்தியா

அலுமினியம், துத்தநாகம் பூசப்பட்ட பொருள்கள் மீது இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: டிஜிடிஆா் பரிந்துரை

29th Feb 2020 01:27 AM

ADVERTISEMENT

சீனா, வியத்நாம், கொரியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், துத்தநாகம் பூசப்பட்ட பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து டிஜிடிஆா் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சீனா, வியத்நாம், கொரியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், துத்தநாகம் பூசப்பட்ட பொருள்களால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து, அந்த மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தகைய பொருள்களின் இறக்குமதிக்கு டன் ஒன்றுக்கு 14.3 டாலா் முதல் 173.1 டாலா் வரை பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் விரைவில் முடிவெடுக்கும் என்று அந்த அறிவிக்கையில் டிஜிடிஆா் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சீனா, வியத்நாம், கொரியா நாடுகளிலிருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்து குவிக்கப்படும் அலுமினியம், துத்தநாக வா்ணப்பூச்சுப் பொருள்களால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிப்படைவதாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் கோட்டட் புராடக்ட்ஸ் டிஜிடிஆா்-அமைப்பில் புகாா் தெரிவித்திருந்தது. அதற்காக அந்நிறுவனம் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் டிஜிடிஆா் கடந்த ஆண்டு ஏப்ரலில் விசாரணையை தொடக்கியது.

உள்கட்டமைப்பு திட்டங்கள், சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுமினிய, துத்தநாக பூச்சுப் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT