இந்தியா

இந்தியா என்றால் என்ன? கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்

26th Feb 2020 12:22 PM

ADVERTISEMENT


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக 24ம் தேதி இந்தியா வந்திருந்தார். இதுவே டொனால்ட் டிரம்ப்பின் முதல் இந்திய வருகையாகும்.

அவரது பயணத்தின் போது, அமெரிக்கர்களும் இந்தியர்களும் கூகுளில் இது தொடர்பாக என்னென்ன விஷயங்களைத் தேடியுள்ளார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான விஷயம் வெளியாகியுள்ளது.

அதாவது, டிரம்பின் பயணத்தின் போது, அமெரிக்கர்கள் பலரும் கூகுளில், இந்தியா என்றால் என்ன? என்றும், இந்தியா எங்கே இருக்கிறது? என்றும் தேடியுள்ளார்கள்.

கூகுளின் டிரெண்ட்ஸ் மூலம் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால், ஏராளமான அமெரிக்கர்கள் இந்தியா எங்கே இருக்கிறது என்று தேடியிருக்கிறார்கள் என்பதே.

ADVERTISEMENT

அதேப்போல, ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்தியா என்றால் என்ன என்ற வார்த்தையும் அதிகளவில் தேடப்பட்டுள்ளது. 

அதே சமயம், டிரம்ப் வருகையின் போது இந்தியாவில் இருந்து அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தை என்னவென்றால், டிரம்ப் தங்கியிருந்த ஐடிசி மயூரா ஹோட்டல் பற்றித்தான் ஏராளமான இந்தியர்கள் தேடியுள்ளனர். அடுத்த இடத்தில், டொனால்ட் டிரம்ப் பாகுபலி என்றும் தேடப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் வருகையின் போது பாகுபலி போல டிரம்ப்பை சித்தரித்து ஒரு விடியோ வெளியானது. பிறகு அது நீக்கப்பட்டது. அந்த விடியோவைத்தான் இந்தியர்கள் பலரும் தேடியுள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டிரம்ப்பின் குடும்பம், அவரது மகள் இவாங்காவின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 
 

Tags : Trump
ADVERTISEMENT
ADVERTISEMENT