இந்தியா

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தாக்குதல்: பாதுகாப்புப்படை வீரர் படுகாயம்

26th Feb 2020 05:27 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப்படையினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவர் படுகாயமுற்றார். 

சத்தீஸ்கரில் நாராயண்பூர் பகுதி அருகே நக்ஸல்கள் புகுந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, சிறப்புப் பாதுகாப்புப்படையினர் அங்கு சென்றனர். தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் வீரர் ஒருவர் படுகாயமுற்றார்.

காயமுற்ற அவர் விமானத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டு ராய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT