ஆலப்புழா: கேரளத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.
கேரளாவில் காவல்துறையினரின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்று இம்மாதத் துவக்கத்தில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கை வெளியானது. இதையடுத்து ஆளும் இடதுசாரி அரசின் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. குறிப்பாக எதிர்கட்சித் தலைவரான காங்கிரசின் ரமேஷ் சென்னிதாலா முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் கேரளத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சென்னிதாலாகூறியதாவது:
கேரளாவில் காவல்துறையினரின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்ற மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கத் துவங்கியதில் இருந்து, இந்த் ஒட்டுக் கேட்பு நடைபெற்று வருகிறது. எதிர்கட்சிகள் மற்றும் ஊடகத்தினருக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கும் விதமாக இச்செயல் நடைபெறுகிறது. மோசமான விளைவுகளை உருவாக்குமென்பதால் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.