இந்தியா

பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக் மீண்டும் தேர்வு

26th Feb 2020 05:27 PM

ADVERTISEMENT

பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் தலைவராக ஒடிஸா முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனிடையே கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தேர்தல் நடத்தும் அதிகாரி பி.கே.தேவிடம் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் தலைவராக ஒடிஸா முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் எட்டாவது முறையாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஜு ஜனதா தளம் கட்சியை கடந்த 1997-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி நவீன் பட்நாயக் தொடங்கினார்.

கட்சித் தொடங்கிய முதலே அவரே அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT