இந்தியா

தில்லி வன்முறை: பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

26th Feb 2020 04:52 PM

ADVERTISEMENT


புது தில்லி: வடகிழக்கு தில்லிப் பகுதியில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பான வழக்கில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தில்லி காவல்துறை ஆணையரிடம் தொடர்பு கொண்டு அறிவுறுத்துமாறு தில்லி சிறப்பு காவல்துறை ஆணையரிடம் தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

எஃப்ஐஆர் பதிவு செய்வதில் காட்டப்படும் தாமதம், மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியது தொடர்பாக நீதிபதியிடம் 3 விடியோக்கள் காண்பிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், உத்தரவிட்ட நீதிபதி, பாஜக தலைவர்கள் மூன்று பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யுமாறும், இந்த மூன்று விடியோக்கள் மட்டுமல்லாமல் வன்முறை தொடர்பான மேலும் விடியோக்கள் கிடைத்தால் அதை அடிப்படையாக வைத்தும் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சட்டத்தைக் காக்கும் பணியை காவல்துறையினர் எந்த பயமும், அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேஹ்தா, காவல்துறையினர் ஒன்றும் சுற்றுலா செல்லவில்லை. ஆசிட் தாக்குதலுக்குக் கூட ஆளாகிறார்கள் என்று வாதிட்டார்.
 

Tags : delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT