இந்தியா

உன்னாவ் விநோதம்: இறப்புச் சான்றிதழில் பிரகாசமான எதிர்காலம் என எழுதிக் கொடுத்த அதிகாரி

26th Feb 2020 11:36 AM

ADVERTISEMENT


உன்னாவோ: யாராவது இறந்த நபருக்கு பிரகாசமாக எதிர்காலம் என்று வாழ்த்துவதைப் பார்த்திருப்பீர்களா அல்லது கேள்விப்பட்டிருப்பீர்களா?

இதுபோன்ற ஒரு விநோதமான சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் நடந்துள்ளது.

கடந்த மாதம் உடல் நலக் குறைவால் உயிரிழந்த ஒரு முதியவரின் இறப்புச் சான்றிதழில் அரசு அதிகாரிதான் பிரகாசமான எதிர்காலம் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிர்வாரியா கிராமத்தைச் சேர்ந்த லஷ்மி ஷங்கர் என்பவர் ஜனவரி 22ம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறப்புச் சான்றிதழை பெற மகன் விண்ணப்பித்தபோது, வெறும் இறப்புச் சான்றிதழ் மட்டும் கிடைக்கவில்லை. இறப்புச் சான்றிதழில், கிராம நிர்வாக அதிகாரி பாபுலால், இவரது பிரகாசமான எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துகள் என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பாபுலால், புதிய இறப்புச் சான்றிதழ் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

Tags : unnao
ADVERTISEMENT
ADVERTISEMENT