இந்தியா

துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் வைத்திருந்த குற்றவாளி கைது!

26th Feb 2020 01:39 PM

ADVERTISEMENT

 

குற்றச் செயலில் ஈடுபட ஊதியமாகப் பெற்ற ரூ.50 ஆயிரம் பணத்தை வைத்திருந்த நபரை சிறப்பு போஸீஸ் குழுவினர் (எஸ்.டி.எஃப்) இன்று (புதன்கிழமை) கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட தேவேந்திர யாதவ் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் வசிப்பவர். மேலும் அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  

ஜனவரி 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 307 மற்றும் 137 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து மேலும் விபரங்கள் விசாரணைக்குப் பின் அறிவிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT