இந்தியா

ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: 5 பேர் கைது

26th Feb 2020 01:56 PM

ADVERTISEMENT

மும்பையில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை மாலை போரிவலியில் 68 வயதான ஆட்டோ  டிரைவரை அடித்து கொலை செய்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர் ராம்துலர் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்புவதற்கு பணம் செலுத்திய பின்னர் யாதவ் கேஸ் பம்ப் ஊழியரிடமிருந்து தனக்குரிய மீதிப் பணத்தைத் திரும்பக் கேட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதைக் கண்டு கோபமடைந்த கேஸ் பம்ப் ஊழியர்கள் அவரை இரக்கமின்றி அடிக்கத் தொடங்கினர்.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும், விசாரணை நடந்து வருகிறது

Tags : auto driver
ADVERTISEMENT
ADVERTISEMENT