இந்தியா

ஹிமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

26th Feb 2020 05:59 PM

ADVERTISEMENT

ஹிமாசல பிரதேசத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ஹிமாசல பிரதேசம், சம்பா மாவட்டத்தில் இன்று காலை 7.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் எவ்வித சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. 

ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியின் வடகிழக்கு பகுதியில் 5 கிலோமீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT