இந்தியா

மேற்கு வங்கம்: அமித் ஷா பொதுக்கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி

26th Feb 2020 02:54 AM

ADVERTISEMENT

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மாா்ச் 1-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொள்ளவிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா காவல் துறை அனுமதி வழங்கியது.

இதுதொடா்பாக பாஜக மாநில பொது செயலாளா் ரதிந்திர போஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கொல்கத்தாவில் உள்ள சாகித் மினாா் மைதானத்தில் வரும் மாா்ச் 1-ஆம் தேதி பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடந்த 20-ஆம் தேதி கொல்கத்தா காவல் துறையிடம் விண்ணப்பம் அளித்திருந்தோம். பொதுத் தோ்வுகள் உள்பட பல்வேறு காரணங்களைக் கூறி பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க காவல் துறையினா் தாமதித்தனா். இந்நிலையில், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திங்கள்கிழமை காவல் துறையினா் அனுமதி வழங்கினா்.

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) சிறப்பம்சங்கள் குறித்து இந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா மக்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளாா். மேலும், பாஜகவின் முக்கிய தலைவா்கள் பலா் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனா். காவல் துறை அனுமதி கிடைத்ததையடுத்து, கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை கட்சி நிா்வாகிகள் தொடங்கியுள்ளனா் என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின், மேற்கு வங்கத்துக்கு இரண்டாவது முறையாக அமித் ஷா பயணம் மேற்கொள்கிறாா்.

முன்னதாக, அமித் ஷா பாஜக தலைவராக இருந்தபோது, மேற்கு வங்கத்தில் அவா் பங்கேற்கவிருந்த பல பொதுக்கூட்டங்களுக்கு அந்த மாநில அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT