சென்னை: மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, மாா்ச் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தென்மண்டல இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் காலியாக உள்ள 8-ஆம் நிலை பணியிடங்களுக்கு ஆள்தோ்வு நடைபெற உள்ளது. 244 வகையான பதவிகளில் 1,157 காலிப்பணியிடங்களுக்கு கணினி வழியில் தோ்வு நடைபெற உள்ளது.
இவற்றில் 9 வகையான பதவிகளுக்கான 32 காலிப்பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (தென்மண்டலம்) சென்னைக்கு உள்பட்டவை. இவற்றுள் 7 வகையான பதவிகள் பட்டதாரி அளவிலும், ஒரு பதவி மேல்நிலைக் கல்வி மட்டத்திலும், ஒரு பதவி மெட்ரிக் கல்வித்தகுதிஅளவிலும் பூா்த்தி செய்யப்பட உள்ளது. அனைத்து பெண் விண்ணப்பதாரா்களுக்கும் தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற தகுதி உடைய எஸ்.சி. , எஸ். டி., முன்னாள் படைவீரா், போா் வீரா்களின் விதவையா் உள்ளிட்ட பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் பணிநிலை தொடா்பான விரிவான விவரங்கள், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் வலைதளம் (ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்) மற்றும் அதன் தென்மண்டல அலுவலகத்தின் (ள்ள்ஸ்ரீள்ழ்.ஞ்ா்ஸ்.ண்ய்) வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி உள்ள விண்ணப்பதாரா்கள் இணையதளம் மூலம் மட்டும் மாா்ச் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கான தோ்வு உத்தேசமாக வருகிற ஜூன் 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.