இந்தியா

தில்லி அர​சின் மகிழ்ச்சி வகுப்​பு​கள் மாண​வர்​க​ளுக்கு ஊக்​க​ம​ளிக்​கின்​றன: மெலா​னியா டிரம்ப் பெர

26th Feb 2020 05:35 AM | நமது நிரு​பர்

ADVERTISEMENT


புது தில்லி: தில்லி அர​சின் மகிழ்ச்சி வகுப்​பு​கள் மாண​வர்​க​ளுக்கு ஊக்​க​ம​ளிக்​கும் வகை​யில் உள்​ளன என்று அமெ​ரிக்க அதி​பர் டொனால்ட் டிரம்​பின் மனை​வி​யும், அமெ​ரிக்க முதல் பெண்​ம​ணி​யு​மான மெலா​னியா டிரம்ப் பெரு​மி​தத்​து​டன் தெரி​வித்​தார். தில்லி அர​சின் மகிழ்ச்சி வகுப்​பைப் பார்​வை​யிட, தெற்கு தில்லி மோதி பார்க்​கில் உள்ள சர்​வோ​தய இரு பாலர் அர​சுப் பள்​ளிக்கு மெலா​னியா டிரம்ப் செவ்​வாய்க்​கி​ழமை வருகை தந்​தார். இந்​திய, அமெ​ரிக்க கொடி​க​ளைக் கையில் ஏந்​தி​யா​வாறு நின்​றி​ருந்த மாண​வர்​கள், அவரை உற்​சா​க​மாக வர​வேற்​ற​னர். மாணவி ஒரு​வர் மெலா​னியா டிரம்​புக்கு நெற்​றி​யில் தில​க​மிட்டு வர​வேற்​றார். மாண​வர்​கள் மற்​றும் ஆசி​ரி​யர்​க​ளு​டன் 20 நிமி​டங்​கள் மெலா​னியா கலந்​து​ரை​யா​டி​னார். அப்​பள்​ளி​யில் உள்ள வாசிப்பு அறை, செயல்​பாட்டு அறை உள்​ளிட்​ட​வற்றை அவர் பார்​வை​யிட்​டார். மேலும், அங்கு நடை​பெற்ற யோகா வகுப்​பை​யும் பார்​வை​யிட்ட அவர், அங்​குள்ள மாண​வர்​க​ளு​டன் கலந்​து​ரை​யா​டி​னார். பிறகு, அந்​தப் பள்​ளி​யில் நடை​பெற்ற மகிழ்ச்சி வகுப்​பைப் பார்​வை​யிட்​டார். 

பள்​ளி​யில் நடை​பெற்ற கலை நிகழ்ச்​சி​க​ளை​யும், மாண​வர்​க​ளின் பாரம்​ப​ரிய நட​னங்​க​ளை​யும் அவர் கண்டு ரசித்​தார். பின்​னர் தாங்​கள் வரைந்த மது​பானி ஓவி​யங்​க​ளை​யும் கையால் செய்​யப்​பட்ட அன்​ப​ளிப்​புப் பொரு​ளை​யும் அவ​ருக்கு மாண​வர்​கள் அன்​ப​ளிப்​பாக வழங்​கி​னார்​கள். 

பின்​னர் அவர் மாண​வர்​க​ளி​டையே பேசு​கை​யில், "இந்​திய மக்​கள் மிக​வும் அன்​பா​ன​வர்​க​ளாக உள்​ள​னர். இந்​தப் பள்​ளி​யில் மாண​வர்​கள் தங்​க​ளு​டைய தினத்தை ஆழ்ந்த கவ​னிப்​பு​ட​னும், சூழல் தொடர்​பான அறி​வு​ட​னும் தொடங்​கு​கி​றார்​கள். இங்கு நடை​பெ​றும் மகிழ்ச்சி வகுப்​பு​கள் மாண​வர்​க​ளுக்கு ஊக்​க​ம​ளிக்​கும் வகை​யில் உள்​ளன. இதன் மூலம், மாண​வர்​க​ளுக்​குச் சிறந்த, ஆரோக்​கி​ய​மான எதிர்​கா​லம் கிடைப்​பதை கல்​வி​யா​ளர்​கள்​உ​றுதி செய்​துள்​ள​னர்' என்​றார்.

இந்த நிகழ்​வில் தில்லி முதல்​வர் அர​விந்த் கேஜ​ரி​வால், துணை முதல்​வர் மணீஷ் சிசோ​டியா ஆகி​யோர் பங்​கேற்​க​வில்லை. முன்​ன​தாக மெல​னியா டிரம்பை வர​வேற்​கும் வகை​யில் கேஜ​ரி​வால் தனது சுட்டு​ரை​யில், "தில்லி அர​சுப் பள்​ளி​க​ளில் கற்​பிக்​கப்​ப​டும் மகிழ்ச்சி வகுப்​பு​கள் கூறும் செய்​தியை மெலா​னியா டிரம்ப் எடுத்​துச் செல்​வ​தில் மகிழ்ச்சி' என்று தெரி​வித்​துள்​ளார்.

ADVERTISEMENT

தில்லி அரசு பள்​ளி​க​ளில் மகிழ்ச்சி வகுப்​பு​கள் ஆம் ஆத்மி அர​சால் கடந்த 2018, ஜூலை​யில் தொடங்​கப்​பட்​டன. கல்வி அமைச்​சர் மணீஷ் சிசோ​டியா தனிக் கவ​னம் எடுத்து இந்த வகுப்​பைத் தொடங்​கி​னார். தினந்​தோ​றும் சுமார் 45 நிமி​டங்​கள் நடை​பெ​றும் இந்த வகுப்​பில் மாண​வர்​க​ளுக்கு தியா​னம், மனதை ஒரு​நி​லைப்​ப​டுத்​து​தல் ஆகி​யவை சொல்​லிக் கொடுக்​கப்​ப​டு​கின்​றன. இதில் மாண​வர்​கள் கதை சொல்​லு​தல், தங்​க​ளது அனு​ப​வங்​க​ளைப் பகிர்ந்து கொள்​ளு​தல் ஆகி​ய​வை​யும் அடங்​கும். 

இந்த மகிழ்ச்சி வகுப்​பு​கள் உல​க​ளா​விய கவ​னத்​தைப் பெற்​றுள்​ள​தா​க​கக் கூ​றப்​ப​டு​கி​ற​து.

ADVERTISEMENT
ADVERTISEMENT