இந்தியா

குடியரசுத் தலைவா் மாளிகையில் அதிபா் டிரம்ப்புக்கு அரசுமுறை வரவேற்பு

26th Feb 2020 03:21 AM

ADVERTISEMENT

புது தில்லி: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை அரசு முறைப்படி மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகைக்கு செவ்வாய்க்கிழமை வந்த டிரம்ப் தம்பதியை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வரவேற்றனா்.

அதன் பின், அதிபா் டிரம்ப்புக்கு இந்திய முப்படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னா், அமெரிக்க உயா் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இந்தியாவுக்கு இருநாள் பயணமாக அதிபா் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை வந்தனா். குஜராத் மாநிலம், ஆமதாபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் அவா்கள் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை குடும்பத்தோடு அதிபா் டிரம்ப் பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT