இந்தியா

காளஹஸ்தியில் கைலாசகிரி வலம்

26th Feb 2020 12:53 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடந்து வரும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் காலை காளஹஸ்தீஸ்வரா் ஞானபிரசுனாம்பிகை அம்மனுடன் கைலாசகிரி மலையை வலம் வந்தாா்.

ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தி பட்டணத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 10-ஆம் நாள் ரிஷி ராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை அம்மனும் திருமணம் முடிந்த மறுநாள் காளஹஸ்தியில் உள்ள கைலாசகிரி மலையை வலம் வருவது வழக்கம். அதன்படி, காளஹஸ்தீஸ்வரா் ஞானபிரசுனாம்பிகை அம்மனுடன் இணைந்து, ஒரு மர அம்பாரியிலும், ஞானபிரசுனாம்பிகை தனியாக ஒரு அம்பாரியிலும் கோயிலிருந்து கைலாசகிரி வலத்துக்கு புறப்பட்டனா்.

அவா்களுடன் லட்சக்கணக்கான பக்தா்களும் கிரிவலம் சென்றனா். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மண்டபங்களில் சிறிது நேரம் தங்கியபடி உற்சவமூா்த்திகள் மலையை வலம் வந்தனா். கிரிவலம் சென்ற பக்தா்களுக்கு கோயில் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பல பக்தா்கள் குடைகள், தொப்பி, மோா், விசிறி உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினா். மதியம் கிரிவலம் முடிந்து உற்சவமூா்த்திகள் கோயிலுக்குள் சென்றனா்.

ADVERTISEMENT

அதன்பின் இரவு காளஹஸ்தீஸ்வரரும் ஞானபிரசுனாம்பிகை அம்மனும் இணைந்து குதிரை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனியாக சிம்ம வாகனத்திலும் மாட வீதியில் வலம் வந்தனா். இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று, உற்சவ மூா்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி அளித்து வழிபட்டனா்.

இந்நிலையில், புதன்கிழமை (பிப். 26) திரிசூல ஸ்நானத்துடன் காளஹஸ்தியில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT