இந்தியா

மேக்கேதாட்டுவில் அணை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: தமிழக அரசு திட்டவட்டம்

25th Feb 2020 04:40 PM

ADVERTISEMENT


புது தில்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படக் கூடிய கடுமையான பாதிப்புகளை சுட்டிக்காட்டியிருக்கும் தமிழக அரசு, மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT