உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 6 நீதிபதிகளுக்கும், சில ஊழியர்களுக்கும் திடீரென பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எச்1என்1 (பன்றிக்காய்ச்சல்) நோயால் ஆறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, வழக்குரைஞர்கள் மற்றும் ஊழியர்களுடனான கூட்டமைப்புடன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதையடுத்து நோய் தொற்றைக் கட்டுப்படுத்த வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு தடுப்பூசி போட பரிந்துரைத்தார்.
இதுதொடர்பாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி சந்தித்துப் பேசினார். அப்போது எச்1என்1 பரவுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் வழக்குரைஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.