இந்தியா

பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் மோடி - டிரம்ப்

25th Feb 2020 12:43 PM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியா - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பிறகு மோடி - டிரம்ப் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

தனது அழைப்பை ஏற்று இந்தியா வந்த டொனால்ட் டிரம்ப்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறினார்.  ஆயிரக்கணக்கான மக்கள் கூடி என்னை வரவேற்றது, எனக்குக் கிடைத்த கௌரவம் என்று டிரம்பும் கூறினர்.

நேற்று ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்தபோதெல்லாம் மக்கள் கரவொலி எழுப்பினார்கள். அதிக அளவில் மக்கள் மோடியை நேசிப்பது கரவொலி மூலம் தெரிய வந்தது. இந்தியப் பயணம் மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது என்று டிரம்ப் கூறினார்.

ADVERTISEMENT

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் உயர்மட்டக் குழு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையின் நிறைவாக இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 

Tags : Trump
ADVERTISEMENT
ADVERTISEMENT