இந்தியா

மோடி - டிரம்ப் கூட்டாக பேட்டி: இந்தியா - அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

25th Feb 2020 01:39 PM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியா அமெரிக்கா இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக மோடி - டிரம்ப் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மோடி - டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தையில் எண்ணெய் நிறுவனங்கள், சுகாதாரத் துறை உள்ளிட்ட மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது மோடி கூறியதாவது, குடும்பத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா வந்த டிரம்ப்புக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டின் மக்களுக்காகவுமே இருநாட்டு உறவு பலப்படுத்தப்படுகிறது. மக்களை முன்னிலைப்படுத்தியே இரு நாட்டு உறவுகளும் மேம்படுத்தப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையே நல்லுறவை மேம்படுத் அனைத்து வகையிலும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ADVERTISEMENT

6 மாதங்களில் ஐந்து முறை டிரம்ப்பை சந்தித்துப் பேசியுள்ளேன். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முக்கியத்தும் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.

வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். இருநாடுகளின் உறவை பலப்படுத்த ராணுவ ஒத்துழைப்பு அவசியம். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு எடுத்துள்ளன. தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மோடியைத் தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப்,  இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.

இந்தியாவுக்கு வந்த எங்களுக்கு, இந்திய மக்கள் அளப்பறிய அன்பை வெளிப்படுத்தினர். எனது இந்திய வருகை 2 நாடுகளுக்கும் மிகுந்த பலனை அளிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.  5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து  அலோசனை நடத்தப்பட்டது.

இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்துக்கு வழங்க ஒப்பந்தம் கையழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய - அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு மேம்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT