இந்தியா

மெலானியாவை வரவேற்கத் தயாராக இருக்கும் தில்லி அரசுப் பள்ளி மாணவர்கள்

25th Feb 2020 11:39 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியாவுக்காக தில்லியில் உள்ள அரசுப் பள்ளியின் மாணவ, மாணவிகள் அழகான அலங்கார ஆடைகளுடன் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.

தில்லியின் தெற்கு மோடி பாக் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், மெலானியாவை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சர்வோதயா இருபாலர் பயிலும் உயர்நிலைப் பள்ளி இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற பெருமையோடு விளங்கும் மெலானியாவை வரவேற்கத் தயார் செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் பல்வேறு பகுதிகளிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலங்களை ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் போட்டுள்ளனர்.

ADVERTISEMENT

பள்ளியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தில்லி அரசுப் பள்ளிக்கு வந்து மிக மகிழ்ச்சியான பள்ளி வகுப்பறை நாட்களை நேரில் பார்க்க மெலானியா விரும்பியதால், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளும் வண்ண வண்ண ஆடைகளை அணிந்து கொண்டு மெலானியாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்த பள்ளியில் மகிழ்ச்சியான வகுப்பறை திட்டம் சுமார் 14 மாதங்களுக்கு முன்புதான் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Tags : trump
ADVERTISEMENT
ADVERTISEMENT