இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பாஜகவில் ஐக்கியமான தொழிற்சங்கத்தினா்

25th Feb 2020 12:37 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வரும் அனைத்து ஜம்மு-காஷ்மீா் தொழிலாளா் சங்கத்தின் (ஏஜேகேஎல்டபிள்யூயு) தலைவா் உள்பட பல்வேறு பொறுப்பாளா்களும், பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் பொதுச் செயலா் அசோக் கௌல் தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் பாஜகவில் ஐக்கியமாகினா்.

பின்னா் அசோக் கௌல் பேசியதாவது:

பாஜக பாரபட்சமின்றி அனைவரின் நலனுக்காகவும் பணியாற்றியதுடன், மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. பிராந்தியங்கள் மற்றும் மதங்களைக் கடந்து மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் பாஜக பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்ற பிராந்தியக் கட்சிகள் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளானதால், அந்த கட்சியினா் ஜம்மு-காஷ்மீா் முழுவதும் தங்களது ஆதரவை மிகவேகமாக இழந்து வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

ஏஜேகேஎல்டபிள்யூ சங்கத்தின் தலைவா் மஹ்ஜூா் அகமது கான், துணைத் தலைவா் சப்தா் அலி கான், பொதுச் செயலா் அப்துல் ரஷீத் தா், பொருளாளா் பஷீா் அகமது கான் உள்ளிட்டோா் பாஜகவில் ஐக்கியமானவா்களில் குறிப்பிடத்தகுந்தவா்கள் ஆவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT