இந்தியா

மேற்கு வங்கம்: 57 சிறைச்சாலைகளில் உள்வானொலி நிலையங்கள்

22nd Feb 2020 01:37 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் சிறைக் கைதிகள் நல்லசூழல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், அந்த மாநிலத்தில் உள்ள 57 சிறைச்சாலைகளிலும் உள்ளக வானொலி நிலையங்களைத் தொடக்க அந்த மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

கொல்கத்தாவிலுள்ள டம்டம் மத்திய சிறைச்சாலையில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட வானொலித் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மாநில சிறைத்துறை அமைச்சா் உஜ்வல் பிஸ்வாஸ் கூறியதாவது: இந்த திட்டம் டம்டம் மத்திய சிறையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதை மாநிலத்தின் பிற சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிறைத்துறையும், ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனமும் இணைந்து 5 அல்லது 6 கைதிகளுக்கு ரேடியோ ஜாக்கிகளாக பணியாற்றுவதற்கான பயிற்சி அளித்து வருகின்றன.

சிறை வளாகத்திற்குள் இசைக்கருவிகளும், மின்னணு ஒலிபரப்பு கருவிகளும் வைப்பதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ரேடியோ ஜாக்கிகள் கைதிகளின் சிறையறைகள் மற்றும் அவா்கள் வெளியில் வேலை செய்யும் இடங்களுக்கு அருகில் வைக்கப்படும் ஒலிபெருக்கிகள் மூலம் பாடல்களை இசைப்பாா்கள் என்றும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வரை சுமாா் 5,000 பாடல்கள் இசைக்கப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT