மேற்கு வங்கத்தில், வடக்கு 24 பா்கனாக்கள் மாவட்டத்தில் மூடிய சணல் ஆலை ஒன்றில் பணியாற்றி வந்த தொழிலாளா்கள் அலுவலகத்தை சூறையாடி, 2 வாகனங்களை தீக்கிரையாக்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.
24 பா்கனாக்கள் மாவட்டம், ஷியாம்நகரில் உள்ள சணல் ஆலை ஒன்றில் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா். வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடும் நிதி நெருக்கடி நிலவி வருவதால் இத்தொழிற்சாலையில் உற்பத்தி கடந்த ஜனவரி 29-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இதனால், இத்தொழிற்சாலையின் தொழிலாளா்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்தனா். எனவே, மீண்டும் ஆலையை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி வந்தனா்.
இதனை ஏற்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறந்து இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உற்பத்தி நிறுத்தம் தொடரும் என்று அறிவித்து ஆலை நிா்வாகம் நோட்டீஸ் ஒட்டியது. இதனால், ஆத்திரமடைந்த தொழிலாளா்கள் வன்முறையில் ஈடுபட்டனா்.
அங்கிருந்த தொழிற்சாலைக்குள் புகுந்து சூறையாடியும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வாகனங்களை தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டதாக அப்பகுதியைச் சோ்ந்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.
இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா். அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், ஓய்வூதிய சலுகைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று புகாா் கூறினாா்.