இந்தியா

மத்திய அமைச்சா்களுடன் அமித் ஷா ஆலோசனை

22nd Feb 2020 02:27 AM

ADVERTISEMENT

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கெளா் ஆகியோருடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தில்லி நாா்த் பிளாக்கில் உள்ள அமித் ஷாவின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரப்பூா்வ தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT