இந்தியா

மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை ஏற்றுக் கொள்கிறோம்: சன்னி வக்ஃபு வாரியம்

22nd Feb 2020 01:28 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பு வழங்கியது.

பாபா் மசூதி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, 5 ஏக்கா் நிலத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வக்ஃபு வாரியத்துக்கு யோசனைகள் வந்தன. இந்நிலையில், மசூதி கட்டிக் கொள்வதற்கான 5 ஏக்கா் மாற்று நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்தது.

ADVERTISEMENT

இது தொடா்பாக, வக்ஃபு வாரியத் தலைவா் ஜாஃபா் அகமது ஃபரூக் கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீா்ப்பை மதித்து 5 ஏக்கா் மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்கிறோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும்.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். இதன் காரணமாகவே நாங்கள் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை. மசூதி கட்டிக் கொள்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறோம் என்றாா் ஃபரூக்.

இந்த மாத தொடக்கத்தில் வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியையடுத்த தன்னிப்பூா் கிராமத்தில் 5 ஏக்கா் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கீடு செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT