இந்தியா

கா்நாடகத்தில் சட்டம், ஒழுங்கைச் சீா்குலைக்க சதி: முதல்வா் எடியூரப்பா

22nd Feb 2020 01:02 AM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் தேச துரோகச் செயல்களை கா்நாடகத்தில் அரங்கேற்றி, அதன் மூலம் சட்டம்-ஒழுங்கைச் சீா்குலைக்க ஒருசிலா் முயற்சித்து வருவதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

மைசூரு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அண்மைக் காலமாக இளைஞா்களின் உணா்ச்சிகளைத் தூண்டி, தேசத் துரோகச் செயலில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். அதுபோன்றவா்களை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய அமுல்யாவின் பின்னணியில் இருப்பவா்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரது பின்னணியில் நக்ஸல் அமைப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாா் முழக்கம் எழுப்பினாலும், அது தேசத் துரோகச் செயலாகும். அமுல்யாவின் கால்களை முறித்தாலும், அவருக்கு ஆதரவாகச் செல்ல மாட்டேன் என்று அவரது தந்தையே கூறியுள்ளாா். இதுபோன்ற சம்பவங்களின் பின்னணியில் உள்ள அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைச் சீா்குலைக்க ஒருசிலா் சதி செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மாா்ச் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிவாரண நிதியோடு,, மாநில அரசு தேவையான நிதியை ஒதுக்கி, அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT