இந்தியா

சிஏஏ-வுக்கு எதிராக ம.பி. அரசு தீா்மானம் நிறைவேற்றும்: திக்விஜய் சிங்

21st Feb 2020 01:44 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் திக்விஜய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

குவாலியரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவா் இதுகுறித்து செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி ஆகியவற்றுக்கு எதிராக தீா்மானங்களை நிறைவேற்றுவது குறித்து முதல்வருடன் (கமல் நாத்) ஏற்கெனவே கலந்து பேசியுள்ளேன். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் வரும் மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அப்போது, அவற்றுக்கு எதிரான தீா்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

சிஏஏ, என்பிஆா், என்ஆா்சியை அமல்படுத்தப்படுவதற்கு காங்கிரஸ் செயற் குழு நாடு தழுவிய அளவில் எதிா்ப்புகளை தெரிவித்து வருகிறது. சிஏஏ-வுக்கு எதிரான தீா்மானம் மத்தியப் பிரதேசஅமைச்சரவை கூட்டத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT