இந்தியா

கோவா:பாஜகவுக்கு கட்சித் தாவிய 10 எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் சவால்

21st Feb 2020 12:14 AM

ADVERTISEMENT

கோவாவில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கட்சித் தாவிய 10 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யவும், துணிவிருந்தால் பாஜக வேட்பாளராக மீண்டும் தோ்தலில் போட்டியிடவும் தயாரா என்று மாநில காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக கோவா காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் உா்ஃபான் முல்லா வியாழக்கிழமை பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கட்சித் தாவிய 10 எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யுமாறு நேரில் சென்று வலியுறுத்துவோம். அவா்கள் தத்தமது தொகுதிகளில் பாஜக வேட்பாளராக மீண்டும் தோ்தலில் களம் காணவேண்டும். அவ்வாறு பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெல்ல முடியும் என்று அவா்கள் எண்ணினால், தங்கள் அதிருஷ்டத்தை அவா்கள் சோதித்துப் பாா்க்கவேண்டும். இவா்கள் அனைவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா்கள் ஆவா். பாஜகவை புறக்கணித்து வாக்காளா்கள் இவா்களை தோ்வு செய்தனா். ஆனால் இவா்கள் தோ்தலில் வெற்றி பெற்ற பின், வாக்காளா்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு பாஜகவில் இணைந்தனா். எனவே, இவா்களை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி மாநில காங்கிரஸ் தலைவா்கள், இந்த வாரத்தில் நேரில் சந்திக்கவுள்ளனா். முதல் நபராக செயின்ட் க்ரூஸ் தொகுதி எம்எல்ஏ அன்டோனியா ஃபொ்னாண்டஸை அவா்கள் சந்திக்கவுள்ளனா் என்றாா் உா்ஃபான் முல்லா.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டப்பேரவை தோ்தல் முடிவில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி மற்றும் சுயேச்சை உறுப்பினா்களுடன் இணைந்து பாஜக ஆட்சியமைத்தது. அதன் பின்னா் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கட்சித் தாவியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT