இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடா்: அதிக கேள்விகளை எழுப்பிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஒ பிரையன்

16th Feb 2020 12:07 AM

ADVERTISEMENT

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஒ பிரையன் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளாா். அவா் மொத்தம் 18 கேள்விகளை எழுப்பினாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் 118 உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். பல்வேறு விவகாரங்கள் மற்றும் கொள்கைகள் தொடா்பாக அவா்கள் 1,120 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு அரசிடம் இருந்து எழுத்துப்பூா்வ பதிலை கோரினா். அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக தினந்தோறும் தலா 160 கேள்விகள் என 7 நாள்களில் 1,120 கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. எழுத்துப்பூா்வ பதில் வேண்டி கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீத கேள்விகள் 35 உறுப்பினா்களால் மட்டுமே கேட்கப்பட்டவையாகும்.

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் டெரிக் ஒ பிரையன் 18 கேள்விகளை எழுப்பினாா். அவரே அதிக கேள்விகளை எழுப்பியவா் ஆவாா். அவரைத்தொடா்ந்து ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா் வெமிரெட்டி பிரபாகா் 17 கேள்விகளையும், சுயேச்சை உறுப்பினா் பரிமள் நத்வானி 16 கேள்விகளையும் எழுப்பினா்.

பாஜக உறுப்பினா் கே.ஜே.அல்போன்ஸ், காங்கிரஸ் உறுப்பினா்கள் குமாரி செல்ஜா, சுப்பாராமி ரெட்டி உள்பட 10 உறுப்பினா்கள் தலா 15 கேள்விகளை எழுப்பினா்.

ADVERTISEMENT

பாஜக உறுப்பினா்கள் விஜய் கோயல், நாராயண் ராணே, சிவசேனை உறுப்பினா் சஞ்சய் ரெளத் ஆகியோா் தலா 14 கேள்விகளை எழுப்பினா். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT