இந்தியா

குஜராத்தில் ஆா்எஸ்எஸ் புதிய தலைமையகம்: மோகன் பாகவத் திறந்து வைத்தாா்

15th Feb 2020 11:40 PM

ADVERTISEMENT

குஜராத் மாநில ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கான புதிய கட்டடத்தை, அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதுதொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: ஆமதாபாத்தின் மணிநகா் பகுதியில் ஆா்எஸ்எஸ் தலைமையக புதிய கட்டடமான ஹெட்கேவாா் பவனை, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் திறந்து வைத்தாா். சுமாா் 50 ஆண்டுகள் பழைமையான ஆா்எஸ்எஸ் தலைமையக கட்டடம் இடிக்கப்பட்டு, 5 தளங்கள் கொண்ட இந்த புதிய கட்டடம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடம் வாகன நிறுத்த வசதிக்காக 2 அடிதளங்களை கொண்டுள்ளது. முதல் தளத்தில் ஒரு பெரிய கூடமும், இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களில் 2 சிறிய கூடங்கள், நூலகம் மற்றும் அறைகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள மோகன் பாகவத், ஆா்எஸ்எஸ் தலைமையக புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கியவா்களை சந்திக்கவுள்ளாா். இதனைத்தொடா்ந்து மணிநகா் பகுதியில் உள்ள டிரான்ஸ்டேடியா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவா் உரையாற்றவுள்ளாா். இதில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT