இந்தியா

காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

15th Feb 2020 01:55 AM

ADVERTISEMENT

பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஏா்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடா்பாக காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, வரும் 28-ஆம் தேதி வரை காா்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிபந்தனைகளின்படி, ரூ.10 கோடியைப் பிணைத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

மேலும், ‘வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு, வழக்குகள் தொடா்பான விசாரணைக்கு ஒத்துழைப்பேன்’ என உறுதியளிக்கும் கடிதத்தை காா்த்தி சிதம்பரம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT