இந்தியா

காஷ்மீரில் இணைய சேவை மீண்டும் துண்டிப்பு

13th Feb 2020 10:51 AM

ADVERTISEMENT

 

காஷ்மீரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணியின் நிறுவனா் முகமது மக்பூல் பட்டின் நினைவு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் செல்லிடப்பேசி இணைய சேவைகள் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை அதிகாலை துண்டிக்கப்பட்டு பின்னர் அன்றைய தினமே மாலையில் இணைய சேவை வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதன்கிழமை மீண்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக ஊடங்கங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதமே ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT